நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜூஸ்! (Juice)
நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் "மஞ்சள், மிளகு மற்றும் கேரட்" ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து எடுத்துக்கொண்டு, நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மஞ்சள், மிளகு, கேரட் ஜூஸ் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
1.சிறிய அளவிலான கேரட்
2.சிட்டிகை மஞ்சள்
3.ஒரு தேக்கரண்டி மிளகு தூள்
4.தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:-
மிக்ஸியில் "கேரட், மஞ்சள் மற்றும் மிளகு தூள்" இவை அனைத்தையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கலக்குங்கள். நீங்கள் விரும்புகிற திடம் கிடைக்கும் வரை நன்றாக கலக்குங்கள். இப்போது அந்த சாற்றை குடியுங்கள். மிதமான பயிற்சி செய்யுங்கள். நீங்கள் ஏதேனும் மருந்து எடுத்துக்கொண்டிருந்தால் அதை தவிர்க்காதீர்கள்.
இந்த மஞ்சள், மிளகு கேரட் ஜூஸ் பருகி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
Source link: tamil.indianexpress.com