நரகத்தில் வாடும் பெண்கள்
ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :- ஒரு நாள் நானும் , ஃபாத்திமா (ரலி) யும் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க அவர்கள் சமூகத்திற்கு சென்றிருந்தோம். அப்போது கண்மணி நபி (ஸல்) அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள். தந்தையின் அழுகையைப் பார்த்த ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு கண்களில் கண்ணீர் கொப்பளித்து துடி துடித்துப் போய் எனதருமை தந்தையே! தாங்கள் அழுது கொண்டிருக்க காரணம் யாது ?' என்று கேட்டார்கள். எனதருமை மகளே! நான் மிஃராஜ் சென்றிருந்த போது நரகத்தில் வேதனை செய்யப்படும் பெண்களைப் பார்த்தேன். அவர்களை வேதனை செய்யப்படுவதற்கான காரணத்தையும் எனக்கு விவரிக்கப்பட்டது. அந்த காட்சியை நினைத்து அழுது கொண்டிருக்கிறேன் ' என்றார்கள். உடனே ஃபாத்திமா (ரலி) அவர்கள் எனதருமை தந்தையே வேதனை செய்யப்படும் பெண்களைப் பற்றி எனக்கு விபரமாக கூறுங்கள் ' என்று வேண்டிக் கொண்டார்கள். கருணை நபி (ஸல் ) அவர்கள் சொல்லத் துவங்கினார்கள். 1. ஒரு பெண்மணி அவளின் கூந்தலைப் பிடித்து இழுத்துக் கட்டித் தலைகீழாக தொங்க விடப்பட்டிருக்கிறாள். கீழ...